குழந்தைகளுக்கான நோய் தடுப்பு  விழிப்புணர்வு முகாம்: இன்று தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கு, காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (மே 28)  தொடங்கி ஜூன் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் பேர் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கின்றனர். வயிற்றுப்போக்கு, காய்ச்சல் குறித்து தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று ஞதந திரவம் தயாரித்தல், ழஐசஇ மாத்திரைகள் வழங்குதல், கைகழுவுதல், சிறு குழந்தைகளுக்கான உணவு பழக்கம்  தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
செவ்வாய்க்கிழமை (மே 28)  முதல் ஜூன் 8  ஆம் தேதி வரை தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளுக்குச் சென்று  ஞதந   திரவம் மற்றும் ழஐசஇ மாத்திரைகள் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி  மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 1 லட்சத்து 32  ஆயிரத்து 97 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு ஞதந   திரவம் மற்றும் ழஐசஇ  மாத்திரைகள் வழங்க  அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என  மொத்தம் 1725 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளில், வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளின் வீடுகளில் 2 ஞதந  பாக்கெட்டு களும், வயிற்றுபோக்கு அல்லாத குழந்தைகளின் வீடுகளில் ஒரு ஞதந பாக்கெட்டும் விநியோகம் செய்வதுடன், அவர்களுக்கு வயிற்றுபோக்கு ஏற்படும் காலங்களில் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்படும்.
மேலும், வயிற்றுப்போக்கின்போது  2 மாதம் முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ழஐசஇ மாத்திரைகள் 14 நாள்களுக்கு உட்கொள்ள வேண்டும். 14 நாள்களுக்கு மாத்திரை உட்கொள்வதன் மூலம் வயிற்றுப் போக்கினை விரைந்து குணப்படுத்தும். அடுத்து வரும் 3 மாதங்களுக்கு வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும். பிறந்த குழந்தை முதல் 2 மாதத்துக்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்த மாத்திரை வழங்க வேண்டியதில்லை.
இம்முகாமை, செயல்படுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை மற்றும் ஊட்டச்சத்து துறை இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையின் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மாத்திரைகள் கொடுப்பதோடு மாத்திரை மருந்துகள் கொடுக்கும் முறை, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவுப் பழக்கங்கள் குறித்து எடுத்துக் கூறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இம்முகாமிற்கு பொதுமக்கள், தாய்மார்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com