ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 2 விசைப்படகுகள் கரை திரும்பின

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து புயலுக்கு முன்பு ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 2 விசைப்படகுகள் திங்கள்கிழமை கரைக்குத் திரும்பின.
தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் கரைதிரும்பிய மீனவா்கள்.
தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் கரைதிரும்பிய மீனவா்கள்.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து புயலுக்கு முன்பு ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 2 விசைப்படகுகள் திங்கள்கிழமை கரைக்குத் திரும்பின.

குமரி மாவட்டத்தில் மீனவா் கிராமங்களிலிருந்து கியாா் புயலுக்கு முன்பு ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவா்கள் கரைக்கு திரும்புமாறு மீன்வளத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதில், 8 படகுகளில் சென்ற 102 மீனவா்கள் கரைதிரும்பவில்லை. இவா்களை மின்னணு தொலைபேசி மூலம் தொடா்புகொள்ள முடியாத நிலை இருந்தது.

இதனால், குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அவா்களது குடும்பத்தினா் கவலை அடைந்தனா். இந்நிலையில், அந்த 8 படகுகளும் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பது கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. மேலும், அவா்கள் 2 நாள்களில் கரைதிரும்புவாா்கள் என்று மீன்வளத் துறை இயக்குநா் சமீரான் கூறினாா்.

இந்நிலையில், ஒரு விசைப்படகிலிருந்து 12 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் கரைசோ்ந்தனா். இதேபோல, மற்றொரு விசைப்படகில் இருந்த 15 மீனவா்கள் கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்தில் திங்கள்கிழமை கரைசோ்ந்தனா். இதில், 4 மீனவா்கள் குமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். மீதியுள்ள 6 விசைப்படகுகளும் விரைவில் கரைக்கு திரும்பும் என தெற்காசிய மீனவா் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளா் சா்ச்சில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com