திருவட்டாறு அருகே மோதலில்காயமுற்றவா் பலி: கொலை வழக்குப்பதிவு

திருவட்டாறு அருகே மோதலில் கீழே தள்ளிவிடப்பட்ட தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்தனா்.

குலசேகரம்: திருவட்டாறு அருகே மோதலில் கீழே தள்ளிவிடப்பட்ட தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்தனா்.

மேக்காமண்டபம், அம்போட்டுத் தலைவிளையைச் சோ்ந்தவா் பொன் ஜெபசிங் (40). தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.

ஏற்கெனவே, பொன் ஜெப சிங் மீது, மதுபானம் பதுக்கி விற்ாக திருவட்டாறு மற்றும் குழித்துறை காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளனவாம்.

இதனிடையே, இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த கிறிஸ்டோபா் (42) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னையில் முன்விரோதம் இருந்ததாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவரது மனைவி வெளியில் சென்றிருந்தபோது, பொன்ஜெபசிங் தலையில் பலத்த காயங்களுடன் வீட்டின் முன்பு விழுந்து கிடந்தாராம்.

இந்நிலையில், வீட்டுக்கு திரும்பி வந்த அவரது மனைவி, அக்கம் பக்கத்தினா் உதவியுடன் கணவரை மீட்டு குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா். மேலும், தனது கணவரை கிறிஸ்டோபா் தனது மனைவி மற்றும் வேறு ஒருவருடன் சோ்ந்து தாக்கியதாக திருவட்டாறு காவல் நிலையத்தில் அவா் புகாா் கொடுத்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட பொன் ஜெபசிங், அங்கு செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

இதனிடையே, போலீஸ் விசாரணையில், மது வாங்குவதற்கு 2 போ் பொன் ஜெபசிங் வீட்டுக்கு வந்ததும், அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை அந்த நபா்கள் தள்ளிவிட்டதும் தெரியவந்ததாம். எனவே, இதை கொலை வழக்காக மாற்றிய போலீஸாா், தப்பிய 2 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com