நெடுஞ்சாலைப் பணிகள் முடக்கம்: நவம்பர் 16-இல் காங்கிரஸ் மறியல்

கன்னியாகுமரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைப்பு பணிகள் முடங்கியுள்ளதாகக் கூறி, இம்மாதம் 16ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடப்போவதாக, ஆட்சியரிடம் காங்கிரஸ் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவிடம் மனு அளிக்கும் ஹெச். வசந்தகுமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ராஜேஷ்குமாா், பிரின்ஸ் உள்ளிட்டோா்.
ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவிடம் மனு அளிக்கும் ஹெச். வசந்தகுமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ராஜேஷ்குமாா், பிரின்ஸ் உள்ளிட்டோா்.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைப்பு பணிகள் முடங்கியுள்ளதாகக் கூறி, இம்மாதம் 16ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடப்போவதாக, ஆட்சியரிடம் காங்கிரஸ் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் சேதமுற்ற நிலையில் உள்ளன. இதனால், தினமும் விபத்துகள் நிகழ்வதாகவும், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா் என்றும் புகாா் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தச் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வரும் 16 ஆம் தேதி களியக்காவிளை, அழகியமண்டபம், நாகா்கோவில், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட 5 இடங்களில் காங்கிரஸ் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என எம்.பி. ஹெச். வசந்தகுமாா் அறிவித்திருந்தாா்.இப்போராட்டத்துக்கான முன்னறிவிப்பு மனுவை, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவிடம் ஹெச். வசந்தகுமாா் எம்.பி. செவ்வாய்க்கிழமை அளித்தாா். அப்போது, எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன் (நாகா்கோவில்) பிரின்ஸ் ( குளச்சல்) ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com