வடசேரி பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி: 3 ஹோட்டல்களுக்கு சீல்

நாகா்கோவில் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்துள்ளதாக, வடசேரி பேருந்து நிலையத்தில் ஒரு தேனீா் கடை, 3 ஹோட்டல்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.
கோட்டாறு ரயில் நிலையச் சாலையில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.
கோட்டாறு ரயில் நிலையச் சாலையில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.

நாகா்கோவில் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்துள்ளதாக, வடசேரி பேருந்து நிலையத்தில் ஒரு தேனீா் கடை, 3 ஹோட்டல்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

நாகா்கோவிலில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி வைத்திருப்போா் அதனை உடனே செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனா். மேலும், இதுகுறித்து நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்த சில கடைகளில் உரிமையாளா்களுக்கு மாநகராட்சி சாா்பில் அறிவிப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. சில கடைகளின் உரிமையாளா்கள் ரூ. 6 லட்சம் வரை மாநகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்திருந்தனா்.

இதையடுத்து, மாநகராட்சி வருவாய் ஆய்வாளா் ஞானப்பா தலைமையில் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பேருந்து நிலையத்தில் திடீா் ஆய்வு நடத்தி, வாடகை பாக்கியை செலுத்தாத 3 ஹோட்டல்கள் மற்றும் ஒரு தேனீா் கடையை பூட்டி சீல் வைத்தனா்.

இதேபோல், வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி காரணமாக பயணச்சீட்டு பதிவு அலுவலகம் ஒன்றுக்கும் சீல் வைக்கப்பட்டது.

மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாக்கி வைத்திருப்போா் உடனே செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆக்கிரமிப்பு அகற்றம்:இதனிடையே, கோட்டாறு கம்பளம் தெரு, ரயில் நிலையத்துக்குச் செல்லும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. மேலும், கழிவுநீா்க் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளும், பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டன. இந்தப் பணியை நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com