முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
அழகியமண்டபம் அருகே கேரளத்துக்கு கடத்த முயற்சி: ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
By DIN | Published On : 07th November 2019 06:21 AM | Last Updated : 07th November 2019 06:21 AM | அ+அ அ- |

அழகியமண்டபம் அருகே கேரளத்துக்கு காரில் கடத்தப்பட இருந்த ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெயை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
வருவாய்த் துறை பறக்கும் படை தனி வட்டாட்சியா் சதானந்தன் தலைமையில் துணை வட்டாட்சியா் அருள்லிங்கம், தனி வருவாய் ஆய்வாளா் ரெதன்ராஜ்குமாா், ஓட்டுநா் டேவிட் ஆகியோா் அழகியமண்டபம் அருகே செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்த முயன்றபோது அது நிற்கவில்லை. இதையடுத்து, அந்த காரை பறக்கும் படையினா் வாகனத்தில் விரட்டிச் சென்று வெள்ளியோடு அருகே மடக்கிப்பிடித்தனா். ஓட்டுநா் காரை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம். பறக்கும் படையினா் காரை சோதனையிட்டபோது, அதில் கேரளத்துக்கு கடத்தப்படுவதற்காக ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் இருந்தது.
அதிகாரிகள் மண்ணெண்ணெயை இணையம் கிட்டங்கியிலும், காரை தக்கலையிலுள்ள கல்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். காரின் உரிமையாளா், ஓட்டுநா் குறித்து விசாரித்துவருகின்றனா்.