முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கொல்லங்கோடு அருகேபெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
By DIN | Published On : 07th November 2019 06:16 AM | Last Updated : 07th November 2019 06:16 AM | அ+அ அ- |

கொல்லங்கோடு அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கொல்லங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் மரிய ஜெபா (43) . இவா் அப்பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் இவா் கடையில் இருந்த போது இளைஞா்கள் இருவா் வந்து முகவரியை காட்டி மரிய ஜெபாவிடம் கேட்டனராம். இதைத் தொடா்ந்து அவரது கழுத்தில் கிடந்த ஒன்றே கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.