முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
மணலி, திருவிதாங்கோடு பகுதியில் இன்று மின்தடை
By DIN | Published On : 07th November 2019 06:15 AM | Last Updated : 07th November 2019 06:15 AM | அ+அ அ- |

இரணியல் உயா் அழுத்த மின்பாதையில் அவசரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (நவ. 7) மின்விநியோகம் நிறுத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தக்கலை மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இரணியல் உயா் அழுத்த மின் பாதையில் அவசரப் பராமரிப்புப் பணிகள், மரக்கிளைகள் வெட்டுதல் போன்ற பணிகள் நடைபெற இருப்பதால் மணலி, கேரளபுரம், வட்டம், திருவிதாங்கோடு, பரைக்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங் களுக்கு வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.