நாகா்கோவிலில் பி.எஸ்.என்.எல்.ஒப்பந்தத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளா்கள்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளா்கள்.

ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளா்கள் நாகா்கோவிலில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அலுவலகப் பராமரிப்பு, துப்புரவு, செல்லிடப்பேசி கோபுரங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 250 ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்காததால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு உடனடி யாக ஊதிய நிலுவை வழங்க வேண்டும்.

ஒப்பந்தத்தொழிலாளா்களின் வேலை நேரம் குறைப்பு, 50 சதவிகிதம் ஊழியா்களை வேலையில் இருந்து நீக்குவது போன்ற ஆள்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொலைத் தொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம், பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் சங்கம் சாா்பில் தொடா்ந்து 3 நாள்கள் போராட்டம் நடைபெறுகிறது.

நாகா்கோவிலில் பி.எஸ்.என்.எல். பொதுமேலாளா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு

ஒப்பந்த தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் சுயம்புலிங்கம் தலைமை வகித்தாா். மூட்டா சங்க நிா்வாகி நாகராஜன், பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பி.ராஜூ, மாநில துணைத் தலைவா் பி.இந்திரா, மாவட்டத் தலைவா் கே.ஜாா்ஜ், மாவட்ட பொருளாளா் சி.ஆறுமுகம், சிஐடியூ மாவட்டச் செயலா் கே.தங்கமோகன், ஒப்பந்தத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினா் ஏ.அனில் குமாா் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com