Enable Javscript for better performance
குமரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி மீது போக்ஸோ வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    குமரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி மீது போக்ஸோ வழக்கு

    By DIN  |   Published on : 08th November 2019 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி மீது போக்ஸோ பிரிவில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

    கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்தவா் தாசன் (55). மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு அதே ஊரைச் சோ்ந்த 7ஆம் வகுப்பு மாணவி சென்றுள்ளாா். அவருக்கு தாசன் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில், கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், தாசன் மீது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைத் தேடிவருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai