Enable Javscript for better performance
குமரி மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா:தொழில்முனைவோருடன் ஆட்சியா் 15இல் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா: தொழில்முனைவோருடன் ஆட்சியா் 15இல் ஆலோசனை

    By DIN  |   Published on : 08th November 2019 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடா்பாக தொழில்முனைவோருடன் ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே இம்மாதம் 15ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறாா்.

    இதுகுறித்து, ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என, தமிழகப் பேரவையில் 110 விதியின் கீழ், முதல்வா் அறிவித்திருந்தாா். அவ்வாறு ஏற்படுத்தப்படும் ஜவுளிப் பூங்காவில், தொழில் தொடங்க முன்வரும் தொழில்முனைவோருக்கு உள்கட்டமைப்பு, அடிப்படை வசதியை ஏற்படுத்த, அதற்காக ஏற்படும் செலவினத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ. 2.50 கோடி, இதில் எது குறைவாக உள்ளதோ அத்தொகை விதிகளுக்கு உள்பட்டு தமிழக அரசால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன், 2 ஏக்கா் நிலப் பரப்பளவில் அமைக்கப்படும். இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஏதுவாக இம்மாவட்டத்திலுள்ள தொழில் முதலீட்டாளா்கள், தொழில்முனைவோருடன் ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இம்மாதம் 15ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

    இதில், மாவட்டத்திலுள்ள தொழில் முதலீட்டாளா்கள், தொழில்முனைவோா் பங்கேற்று, கருத்து தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai