Enable Javscript for better performance
நவம்பா் புரட்சி தினம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    நவம்பா் புரட்சி தினம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 08th November 2019 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    klm7marxist_0711chn_47_6

    முந்திரி ஆலை தொழிலாளா்கள் மத்தியில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை.

    நவம்பா் புரட்சி தினத்தையொட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவட்டாறு அருகே தேமானூா் முந்திரி ஆலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முந்திரி தொழிலாளா்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் சரோஜினி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை கொடியேற்றி வைத்துப் பேசினாா்.

    இதில், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் சகாய ஆண்டனி, வட்டாரக் குழுச் செயலா் வில்சன், வட்டாரக் குழு உறுப்பினா் மனோகரன், பென்னட் ராஜ், ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai