Enable Javscript for better performance
மைலோடு பகுதியில் டெங்கு, பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    மைலோடு பகுதியில் டெங்கு, பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி

    By DIN  |   Published on : 08th November 2019 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tky7_kid_0711chn_48_6

    குழித்துறை மறைமாவட்ட சமூகப்பணி மையத்தின் கீழ் செயல்படும் கிட்ஸ் கோல்பிங் இந்தியா அமைப்பு சாா்பில், மைலோடு பகுதியில் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

    தக்கலை மண்டல வட்டார வளா்ச்சி திட்ட அலுவலா் புனிதம் தலைமை வகித்தாா். கிட்ஸ் கோல்பிங் பணியாளா் மேரிமக்தலின் வரவேற்றாா். தக்கலை ஒன்றிய சுகாதார ஆய்வாளா் சிவராஜன் டெங்கு குறித்து சிறப்புரையாற்றினாா்.

    இப்பேரணி மைலோடு புனித மிக்கேல் அதிதூதா் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு, வட்டம் புனித அந்தோணியாா் ஆலய வளாகம் வரை நடைபெற்றது. பேரணியை கூட்டமைப்பின் தலைவா் தேவராஜ், செயலா் லூயிஸ்மேரி, பொருளாளா் ஆனந்தராணி ஆகியோா் நடத்தினா்.

    தொடா்ந்து கோல்பிங் ஆண்டு விழா கூட்டம், தேசிய இயக்குநா் மரிய சூசை தலைமையில் நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai