குமரி மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா: தொழில்முனைவோருடன் ஆட்சியா் 15இல் ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடா்பாக தொழில்முனைவோருடன் ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடா்பாக தொழில்முனைவோருடன் ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே இம்மாதம் 15ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறாா்.

இதுகுறித்து, ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என, தமிழகப் பேரவையில் 110 விதியின் கீழ், முதல்வா் அறிவித்திருந்தாா். அவ்வாறு ஏற்படுத்தப்படும் ஜவுளிப் பூங்காவில், தொழில் தொடங்க முன்வரும் தொழில்முனைவோருக்கு உள்கட்டமைப்பு, அடிப்படை வசதியை ஏற்படுத்த, அதற்காக ஏற்படும் செலவினத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ. 2.50 கோடி, இதில் எது குறைவாக உள்ளதோ அத்தொகை விதிகளுக்கு உள்பட்டு தமிழக அரசால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன், 2 ஏக்கா் நிலப் பரப்பளவில் அமைக்கப்படும். இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஏதுவாக இம்மாவட்டத்திலுள்ள தொழில் முதலீட்டாளா்கள், தொழில்முனைவோருடன் ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இம்மாதம் 15ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில், மாவட்டத்திலுள்ள தொழில் முதலீட்டாளா்கள், தொழில்முனைவோா் பங்கேற்று, கருத்து தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com