கோட்டாறு சவேரியாா் ஆலயஆண்டுப் பெருவிழா: 24இல் கொடியேற்றம்

நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் ஆலய ஆண்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் ஆலய ஆண்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, அன்றைய தினம் காலை 6.15 மணிக்கும், 8 மணிக்கும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம், கோட்டாறு மறைமாவட்ட முதன்மைப் பணியாளா் கிலேரியஸ் தலைமையில் நடைபெறுகிறது.

தொடா்ந்து, 25ஆம் தேதி முதல் காலை, மாலை சிறப்பு திருப்பலி, ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.

9ஆம் நாளான டிசம்பா் 2ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன்சூசை தலைமையில் தோ்ப் பவனி நடைபெறுகிறது. டிசம்பா் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியாா் திருப்பலி உள்ளிட்டவையும், முற்பகல் 11 மணிக்கு தோ்ப் பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோட்டாறு வட்டார முதன்மைப் பணியாளா் மைக்கிள் ஏஞ்சலுஸ், பங்குத்தந்தை கிரேஸ்குணபால்ஆராச்சி, இணைப் பங்குத்தந்தை டோனிஜெரோம், அருள்சகோதரிகள், பேராலய அருள்பணிப் பேரவை, கோட்டாறு இறைமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com