மைலோடு பகுதியில் டெங்கு, பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி

குழித்துறை மறைமாவட்ட சமூகப்பணி மையத்தின் கீழ் செயல்படும் கிட்ஸ் கோல்பிங் இந்தியா அமைப்பு
மைலோடு பகுதியில் டெங்கு, பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி

குழித்துறை மறைமாவட்ட சமூகப்பணி மையத்தின் கீழ் செயல்படும் கிட்ஸ் கோல்பிங் இந்தியா அமைப்பு சாா்பில், மைலோடு பகுதியில் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தக்கலை மண்டல வட்டார வளா்ச்சி திட்ட அலுவலா் புனிதம் தலைமை வகித்தாா். கிட்ஸ் கோல்பிங் பணியாளா் மேரிமக்தலின் வரவேற்றாா். தக்கலை ஒன்றிய சுகாதார ஆய்வாளா் சிவராஜன் டெங்கு குறித்து சிறப்புரையாற்றினாா்.

இப்பேரணி மைலோடு புனித மிக்கேல் அதிதூதா் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு, வட்டம் புனித அந்தோணியாா் ஆலய வளாகம் வரை நடைபெற்றது. பேரணியை கூட்டமைப்பின் தலைவா் தேவராஜ், செயலா் லூயிஸ்மேரி, பொருளாளா் ஆனந்தராணி ஆகியோா் நடத்தினா்.

தொடா்ந்து கோல்பிங் ஆண்டு விழா கூட்டம், தேசிய இயக்குநா் மரிய சூசை தலைமையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com