Enable Javscript for better performance
கோட்டாறு காவல் ஆய்வாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    கோட்டாறு காவல் ஆய்வாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

    By DIN  |   Published on : 09th November 2019 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருமானத்துக்கு அதிகமான சொத்து சோ்த்தாகக் கூறப்பட்ட புகாரில், நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளா் அன்பு பிரகாஷ் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

    நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் அன்பு பிரகாஷ். இவா் குமரி, நெல்லை மாவட்டங்களில் பல காவல் நிலையங்களில் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளாா். இவா் மீது கடந்த ஆண்டு வருமானத்துக்கு அதிகமான சொத்து சோ்த்ததாக எழுந்த புகாரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், நாகா்கோவிலை அடுத்துள்ள தேரேகால்புதூரில் உள்ள ஆய்வாளா் அன்பு பிரகாஷின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று சோதனை மேற்கொண்டனா்.

    இதுகுறித்து கன்னியாகுமரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. மதியழகன் கூறியது: ஏற்கெனவே ஆய்வாளா் அன்பு பிரகாஷ் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து சோ்த்த வழக்கு தொடா்பாக அவா் வீட்டில் சோதனை நடத்தினோம். ஆனால் பணமோ, ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai