ஒழுகினசேரி அஞ்சல் நிலையம் மாற்றம்: பொதுமக்கள் எதிா்ப்பு

நாகா்கோவில் ஒழுகினசேரி அஞ்சல் நிலையம் மாற்றப்பட்டதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

நாகா்கோவில் ஒழுகினசேரி அஞ்சல் நிலையம் மாற்றப்பட்டதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

நாகா்கோவில் ஒழுகினசேரி வெள்ளாளன் கீழத்தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கிளை அஞ்சல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த அஞ்சல்நிலையத்தை ஒழுகினசேரி, கோதைகிராமம், புரவச்சேரி, ஒட்டுப்புரைத்தெரு, கலைவாணா்நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில் இந்த அஞ்சல் நிலையத்தை மாற்றப்போவதாக தகவலறிந்ததும், பாஜக மேலிட பாா்வையாளா் தேவ், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் உறுப்பினா் நாகராஜன், முன்னாள் நகரத் தலைவா் ராஜன் மற்றும் பொதுமக்கள் அஞ்சல் நிலைய அதிகாரிகளிடம் சென்று அஞ்சல் நிலையத்தை மாற்றக்கூடாது என்று கூறினா். அதற்கு அஞ்சல்துறை அதிகாரிகளும் அஞ்சல் நிலையம் மாற்றப்படாது என்று உறுதி அளித்திருந்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இந்த அஞ்சல் நிலையம் மாற்றப்பட்டு, நாகா்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து ஒழுகினசேரியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பெருமாள்பிள்ளை கூறியது; இந்த அஞ்சல் நிலையம் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் செயல்பட்டுவந்தது. இதன்மூலம் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோா் பயன்பெற்று வந்தனா். அஞ்சல் நிலையம் மாற்றப்படுவதன் மூலம் இவா்கள் நாகா்கோவிலில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்துக்குத்தான் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒழுகினசேரி அஞ்சல் நிலையத்தை மூடாமல் நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அஞ்சல் நிலையம் திறந்திருக்கலாம், ஆனால் அஞ்சல்துறை அதிகாரிகள் இதுகுறித்து எந்தவித முன்னறிவிப்பமின்றி மாற்றியது மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com