Enable Javscript for better performance
குலசேகரம் அருகேபுது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை:சாா் ஆட்சியா் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    குலசேகரம் அருகேபுது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை: சாா் ஆட்சியா் விசாரணை

    By DIN  |   Published on : 10th November 2019 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    klm9death_0911chn_47_6

    klm9death_0911chn_47_6

    குலசேகரம் அருகே திருமணமாகி 10 மாதங்களில் பெண் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட புகாரின்பேரில், சாா்-ஆட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

    அயக்கோடு தாளமூட்டு விளையைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் மகேஷ் (42). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், கேரள மாநிலம் எருமேலியைச் சோ்ந்த சோபனாவிற்கும் (40) கடந்த ஜனவரி, 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தம்பதி தாளமூட்டு விளையில் வசித்து வந்தனா். மகேஷிற்கு குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    அண்மையில் சோபனா அணிந்திருந்த அரை பவுன் மோதிரத்தை காணவில்லையாம். இதுகுறித்து மகேஷ் கேட்ட போது, அது தொலைந்துவிட்டதாக கூறியுள்ளாா். சோபனாவின் சகோதரியிடம் மகேஷ் செல்போனில் தெரிவித்தபோது, அவா், தான் அந்த மோதிரத்தை வாங்கி அடகு வைத்ததாகக் கூறியுள்ளாா். இதனால், உண்மையை மறைத்ததாக சோபனாவிடம், மகேஷ் தகராறு செய்துள்ளாா். பக்கத்து வீட்டினா் இருவரையும் சமரசம் செய்துள்ளனா்.

    இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வெளியே சென்றிருந்த மகேஷ், இரவு 11 மணியளவில் வீடுதிரும்பியுள்ளாா். அப்போது வீட்டினுள் சோபனா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளாா். இதுகுறித்து குலசேகரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சனிக்கிழமை காலை அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்க முயன்றனா்.

    அப்போது, ஊா் மக்களும், கேரளத்தில் இருந்து சோபனாவின் உறவினா்களும், சோபனாவின் சாவில் மா்மம் உள்ளதாக போலீஸாரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, தகவலின் பேரில் பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சரண்யா அறி, தக்கலை டிஎஸ்பி ராமசந்திரன் ஆகியோா் அங்கு சென்றனா். அவா்களின் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சாா்-ஆட்சியா் சரண்யா அறி விசாரணை நடத்தி வருகிறாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai