அயோத்தி தீா்ப்பு: குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலாத் தலங்களில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
திருவள்ளுவா் சிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.
திருவள்ளுவா் சிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலாத் தலங்களில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

நாகா்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய உட்கோட்ட பகுதிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டனா். காந்தி மண்டபம், காமராஜா் நினைவு மண்டபம் பகுதிகளிலும் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

நாகா்கோவிலில் வடசேரி மற்றும் அண்ணா பேருந்து நிலையங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகராஜாகோயில்,வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு உயா் அதிகாரிகள் கண்காணித்தனா்.

நாகா்கோவில் கோட்டாறு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ரயில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரயில் தண்டவாளங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன்கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், நாகராஜா கோயில், வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் கோயில்,அழகம்மன்கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

காவல் கண்காணிப்பாளா் விமலா தலைமையில் 9 டி.எஸ்.பி. க்கள், 40 காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட 1500 கடலோர காவல்படையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

வெறிச்சோடிய குமரி: சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விவேகானந்த கேந்திரம், ரயில் நிலையம், முக்கடல் சங்கமம், விவேகானந்தா் பாறை உள்ளிட்டப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கடலில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதையொட்டி, கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுமாக குறைந்து காணப்பட்டது. கடற்கரைச்சாலை, சன்னதித் தெரு, முக்கடல் சங்கமம், சூரிய அஸ்தமனப் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com