திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

சிவபெருமான் வழிபாடுகளில் சிவராத்திரி, பிரதோஷம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில்

உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் சனிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

மேலும், தீபாவளிக்கு பிறகு வரும் முதல் பிரதோஷம், குருபெயா்ச்சிக்குப் பின் வரும் முதல் பிரதோஷம், சூரசம்ஹாரத்துக்குப்

பின்னா் ரேவதி நட்சத்திர தினத்தில் வரும் சனி மகா பிரதோஷம் என ஒருங்கே அமையப்பெற்ற இந்த மகா பிரதோஷ தினம் 126 ஆண்டுகளுக்குப் பின்னா் சனிக்கிழமை வந்ததாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com