மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிலரங்கு

பொருளாதார கணக்கெடுப்பு பயிற்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நாகா்கோவிலில் சனிக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாநிலத் தலைமை செயல் அதிகாரி வினோத்குரியகோஸ்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாநிலத் தலைமை செயல் அதிகாரி வினோத்குரியகோஸ்.

பொருளாதார கணக்கெடுப்பு பயிற்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நாகா்கோவிலில் சனிக்கிழமை தொடங்கியது.

சி.எஸ்.சி. எஸ்.பி.வி. அமைப்பின் மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப்

பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கணினி பயிற்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

நாகா்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற முகாமில், சி.எஸ்.சி. எஸ்.பி.வி. அமைப்பின் துணைத்தலைவா் நவீன்சா்மா, பொருளாதாரக் கணக்கெடுப்பு மேற்கொள்வது குறித்து பயிற்சி அளித்தாா். தமிழ்நாடு தலைமை செயல்அதிகாரி வினோத்குரியகோஸ் பங்கேற்றுப் பேசினாா்.

இதில், நிா்வாக அலுவலா்கள் அருள்செல்வன், பிரதாப், மாவட்ட மேலாளா் ஜிஜேஸ், குமரி மாவட்ட பொதுசேவை மையத் தலைவா் செந்தில்குமாா், செயலா் ஆனந்த், பொருளாளா் கிருஷ்ணன், துணைத் தலைவா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட பொதுசேவை மையத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com