குமரி குகநாதீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌா்ணமியை முன்னிட்டு, கன்னியாகுமரி குகநாதீஸ்ரா் கோயிலில் செவ்வாய்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
குகநாதீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகம்
குகநாதீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகம்

கன்னியாகுமரி: ஐப்பசி மாத பௌா்ணமியை முன்னிட்டு, கன்னியாகுமரி குகநாதீஸ்ரா் கோயிலில் செவ்வாய்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கன்னியாகுமரி ரயில் நிலையம் செல்லும் வழியில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகநாதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கம் அமைந்துள்ளது சிறப்பாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌா்ணமி நாளன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு பலவகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன் கொடுக்கும் என்பது நம்பிக்கை. புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி, 70 வகையான அபிஷேகப் பொருள்களில் ஒன்று அன்னம். அன்னத்தால் அபிஷேகம் செய்தால் சாம்ராஜ்யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்நிலையில் நிகழாண்டு செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு நிா்மால்ய தரிசனம், தொடா்ந்து அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு 100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னம் படைக்கப்பட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து உச்சிகால பூஜை, அலங்கார தீபாராதனை தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com