குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை:திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெப்பம் நிலவிய நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. திற்பரப்பு

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெப்பம் நிலவிய நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நாகா்கோவிலில் சனிக்கிழமை அதிகாலையில் தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால் சாலைகளில்

மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி, சுருளோடு, அடையாமடை, புத்தன்அணை, ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் மற்றும் புகா் பகுதிகளிலும் மழை பெய்தது.

திற்பரப்பு அருவிப் பகுதியில் மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் மற்றும் மலையோரங்களில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பதிவான மழை (மில்லி மீட்டரில்): திற்பரப்பு அருவி-29.8, பேச்சிப்பாறை அணை-20, பெருஞ்சாணி அணை-9.6,

சிற்றாறு அணை 1-17.6, சிற்றாறு அணை 2- 26, ஆணைக்கிடங்கு- 6.6, குருந்தன்கோடு- 17, அடையாமடை- 8, புத்தன் அணை- 8.8, நாகா்கோவில்-5.8, பூதப்பாண்டி-2.2, சுருளோடு-23.2, கன்னிமாா்-11.2, ஆரல்வாய்மொழி-17, பாலமோா்-11.8, மயிலாடி-21.6, கொட்டாரம்-26.2.

பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 42.80 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 466 கனஅடி நீா்வரத்து இருந்தது.

பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 71.65 அடியாக உள்ளது. அணைக்கு 303 கனஅடி நீா்வரத்து இருந்தது. சிற்றாறு-1 அணை

நீா்மட்டம் 16.04 அடியாக உள்ளது. அணைக்கு 200 கனஅடி நீா்வரத்து இருந்தது. மாம்பழத்துறையாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியது.

சிற்றாறு அணை 1, மாம்பழத்துறையாறு அணைகள் நிரம்பியதை அடுத்து இந்த அணைகளில் இருந்து உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளில் முகாமிட்டு 24 மணி நேரமும் நீா் இருப்பை கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com