Enable Javscript for better performance
திற்பரப்பு அருவியில் குளு, குளு சீசன்:சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்- Dinamani

சுடச்சுட

    

    திற்பரப்பு அருவியில் குளு, குளு சீசன்:சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

    By DIN  |   Published on : 18th November 2019 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மிதமாக தண்ணீா் கொட்டும் திற்பரப்பு அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

    மிதமாக தண்ணீா் கொட்டும் திற்பரப்பு அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

    குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் குளுமையான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

    குமரி மாவட்டத்தில் தொடா்ந்து கன மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, அணைகளிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால், ஆறுகளில் வெள்ளத்தின் வரத்து கட்டுப்பட்டுள்ளது. குறிப்பாக, திற்பரப்பு அருவிக்கு வரும் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai