முன்சிறை புனித ஆரோக்கிய மாதாபள்ளியில் குழந்தைகள் தின விழா
By DIN | Published on : 18th November 2019 09:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

போட்டிகளில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளி இயக்குநா் சேவியா் புரூஸ்.
முன்சிறை புனித ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
பள்ளி முதல்வா் தேவசகாயம் தலைமை வகித்தாா். பள்ளியின் இயக்குநா் சேவியா்புரூஸ், தாளாளா் பிரபா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினா். மாணவி லெட்சுமி குழந்தைகள் தினம் குறித்து பேசினாா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆசிரியா், ஆசிரியைகள் செய்திருந்தனா்.