களியக்காவிளையில் மினி லாரி பறிமுதல்

கேரளத்தில் இருந்து கோழி இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த மினி லாரியை போலீஸாா்

களியக்காவிளை: கேரளத்தில் இருந்து கோழி இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த மினி லாரியை போலீஸாா் களியக்காவிளையில் பறிமுதல் செய்தனா். ஒட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

களியக்காவிளை காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் களியக்காவிளை சந்திப்பில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

லாரியில் இருந்து துா்நாற்றம் வீசியதை அறிந்த போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கேரளத்தில் இருந்து கோழி இறைச்

சிக் கழிவுகளை கொட்டுவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மினி லாரியை பறிமுதல் செய்தனா். லாரி ஓட்டுநான திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் (31) என்பரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com