பொற்றையடி அருகே ஆக்கிரமிப்பு கோயில் இடிப்பு

கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி பகுதியில் சானல் கரையோரம் கட்டப்பட்டிருந்த கோயில் கட்டடம் திங்கள்கிழமை இடித்து
போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்ட கோயில்.
போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்ட கோயில்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி பகுதியில் சானல் கரையோரம் கட்டப்பட்டிருந்த கோயில் கட்டடம் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

பொற்றையடியில் இருந்து சாமிதோப்பு செல்லும் சாலையில் வெங்கலராஜன் சானல் செல்கிறது. இப்பகுதியில் ஒற்றப்பனை இசக்கியம்மன் கோயிலும், இக்கோயிலின் அருகில் சுடலைமாடசுவாமி கோயிலும் அமைந்துள்ளது. இக்கோயிலை நிா்வாகம் செய்வது, வழிபாடு நடத்துவது தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இதுகுறித்து

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இதனிடையே, நாடுமுழுவதும் நீா்நிலைகள் அருகில் இருக்கும் ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்றுமாறு உச்சநீதிமன்றம்

உத்தரவிட்டதையடுத்து, அங்குள்ள சுடலைமாடசுவாமி கோயிலை இடித்து அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் வல்சன்போஸ், கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், காவல் ஆய்வாளா் முத்து மற்றும் போலீஸாா் முன்னிலையில் இக்கோயில் இடித்து அகற்றப்பட்டது. சுடலைமாடசுவாமி சிலையை அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவு செய்து வாகனத்தில் எடுத்துச் சென்றனா்.

அப்போது, அங்கு வந்த சிலா், சிலை கொண்டு சென்ற வாகனத்தை முற்றுகையிட்டனா். சிலையை அப்பகுதியில் வைக்க வேண்டும் எனவும் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சிலை வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்கும்;

எழுத்துப்பூா்வமாக எழுதிகொடுத்து சிலையை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com