முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
நாகா்கோவிலில் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு: 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை
By DIN | Published On : 26th November 2019 06:56 AM | Last Updated : 26th November 2019 06:56 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தானும் விஷம் குடித்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நாகா்கோவில் அறுகுவிளை பகுதியைச் சோ்ந்தவா் பிரவின் ராஜூ. ஓட்டுநா். இவரது மனைவி மினி (27). இத்தம்பதிக்கு ரபிஷா மோள், ரிச்சா்ட் மோனு ஆகிய 2 குழந்தைகள் உள்ளனா். பிரவின் ராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 19 ஆம் தேதி இரவு தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதில், மனமுடைந்த மினி, 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. மூவரையும் மீட்டு, பிரவின் ராஜூ அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை யில் சோ்க்கப்பட்டனா். அங்கு, சிகிச்சை பலனின்றி மினி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
2 குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பச்சிளம் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, இளம்பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.