Enable Javscript for better performance
‘கருங்கல் - எட்டணி சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்’- Dinamani

சுடச்சுட

    

    ‘கருங்கல் - எட்டணி சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்’

    By DIN  |   Published on : 28th November 2019 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    k27prame_2711chn_35_6

    கருங்கல் -எட்டணி சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க. மேற்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அதன் அமைப்பாளா் ததேயூ பிரேம்குமாா் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்தி அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

    கருங்கல் -இரவிபுதூா்க்கடை சாலை சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு பழுதடைந்து போக்குவத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக, எட்டணி-கருங்கல் இடையே சாலை பல்லாங்குழிகளாக காட்சியளிக்கிறது. இதனால், பள்ளி- கல்லூரி செல்லும் மாணவ- மாணவியா், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

    ஏற்கெனவே, இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தியதால், இரவிபுதூா்க்கடை- கருங்கல் சாலையைச் சீரமைக்க ரு.1.20 கோடி நிதி ஒதுக்கி ஒப்பந்தமும் விடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பணியைத் தொடங்காமல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனா். எனவே, சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, திமுக இளைஞரணி எட்டணி சந்திப்பில் போராட்டம் நடத்தும் எனத் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai