குழித்துறை அருகே இலவச மருத்துவ முகாம்
By DIN | Published on : 28th November 2019 07:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் மாா்த்தாண்டம் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் மிட்ஸ் சமூகப் பணி மையத்தில் அன்னப்பிளவு நோய்க்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மிட்ஸ் சமூக நலப்பணி மையமும், கோயம்புத்தூா் கங்கா மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமை மிட்ஸ் மைய இயக்குநா் ஜாண்குமாா் துவக்கி வைத்தாா். திட்ட அலுவலா் ஷாஜன் ஜோசப், ஒருங்கிணைப்பாளா் ஜோசப் பேட்ரிக் ஆன்றணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா்கள் காா்த்திக், சினோஷ் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மருத்து பரிசோதனை மேற்கொண்டனா்.
அன்னப்பிளவு நோயால் பாதிக்கப்பட்டவா்கள் மிட்ஸ் மையத்தை தொடா்பு கொண்டால் பிளாஸ்டிக் சா்ஜரி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.