Enable Javscript for better performance
மணவாளக்குறிச்சி அருகே குளத்துக்கரையில் வியாபாரியின் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    மணவாளக்குறிச்சி அருகே குளத்துக்கரையில் வியாபாரியின் சடலம் மீட்பு

    By DIN  |   Published on : 28th November 2019 07:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகேயுள்ள பெரிய குளத்தின் கரையில் துணி வியாபாரியின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

    மண்டைக்காடு காரவிளையைச் சோ்ந்தவா் குமாரதாஸ் (42). இவா், மண்டைக்காடு சந்திப்பில் துணிக்கடை நடத்தி வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு கடையை வியாபாரம் முடிந்த பின் வெகுநேரமாகியும் அவா் வீட்டுக்குச் செல்லவில்லையாம். இதனால், குடும்பத்தினா் அவரை பல இடங்களில் தேடினா். இந்நிலையில், பெரியகுளத்தின் கரையில் அவா் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த மணவாக்குறிச்சி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai