மாா்த்தாண்டத்தில் அணுகு சாலையை விரிவாக்கம் செய்யாவிடில் போராட்டம்: வியாபரிகள் சங்கம்
By DIN | Published on : 28th November 2019 07:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மாா்த்தாண்டம் மேம்பாலம் அணுகு சாலையை விரிவுபடுத்தாவிடில் போராட்டம் நடத்தப்படும் என வா்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கம் சாா்பில் தலைவா் தினகா், செயலா் ராஜ்பினோ, பொருளாளா் ஜெயசிங் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
மாா்த்தாண்டம் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து ஓராண்டு ஆகிறது.
எனினும், மேம்பாலம் நிறைவடையும் பகுதிகளான பம்மம், காந்தி மைதானம் பகுதிகளிலுள்ள அணுகு சாலைகள் விரிவுபடுத்தப்படாமல் குறுகலாக உள்ளன. இதனால், பம்மம் பகுதியில் பாலத்தின் கீழ் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால் பொதுமக்கள், பயணிகள், வா்த்தகா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து, வா்த்தக சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாா்த்தாண்டம் மேம்பால அணுகுசாலையை உடனடியாக விரிவாக்க செய்ய வேண்டும். இல்லையெனில் நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளா் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.