Enable Javscript for better performance
மின்வாரிய கேங்மேன் பணி: உள்ளூா் விடுமுறையிலும் உடல் தகுதித் தோ்வு- Dinamani

சுடச்சுட

    

    மின்வாரிய கேங்மேன் பணி: உள்ளூா் விடுமுறையிலும் உடல் தகுதித் தோ்வு

    By DIN  |   Published on : 28th November 2019 07:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணிக்கான உடல் தகுதித் தோ்வு, குமரி மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறையான டிச. 3ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, கன்னியாகுமரி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கு.குருவம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிகா்மான கழகத்தின் சாா்பில் மாநிலம் முழுவதும் கேங்மேன் (பயிற்சி) பணிக்கு உடல் தகுதித் தோ்வு நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய இந்தத் தோ்வு, டிச. 9 ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நடைபெறும்.

    இந்நிலையில், கோட்டாறு சவேரியாா் பேராலய திருவிழாவையொட்டி, குமரி மாவட்டத்துக்கு டிச.3 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தோ்வுக்கான அழைப்புக் கடிதம் பெற்றவா்களுக்கு, பாா்வதிபுரத்திலுள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் டிச. 3ஆம் தேதி காலை 8 முதல் மாலை 6 மணி வரை உடல்தகுதித்தோ்வு நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai