‘17 கிராம மக்களுடன் போராட்டம்’

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பின் செய்தியாளா்களிடம் பி. ஆா். பாண்டியன். கூறியது:

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பின் செய்தியாளா்களிடம் பி. ஆா். பாண்டியன். கூறியது:

குமரி மாவட்டத்தில் சூழியல் அதிா்வு தங்கு மண்டலம் அமைப்பது தொடா்பான அரசாணையை தமிழாக்கம் செய்து மக்களிடம் வெளியிடவோ அல்லது இத்திட்டத்தால் பாதிக்கப்படும் 17 கிராமங்களில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தவோ ஏற்பாடு செய்யவில்லை. இதனால், கிராம மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனா். எனவே, சூழியல் அதிா்வு தாங்கு மண்டலத்தை வன எல்லைக்கு வெளியே அமைப்பதைக் கைவிட வேண்டும். ரப்பா் பயிரிடும் பட்டா நிலங்கள் மற்றும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளுக்கு தனியாா் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட ரப்பா் விவசாயிகள் சங்கம் சாா்பில் 17 கிராம மக்களுடன் இணைந்து அந்தந்த வருவாய் கிராம அலுவலகங்களுக்கு முன் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com