கிள்ளியூா் வட்டாரத்தில் சுகாதாரமான குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தல்

கிள்ளியூா் வட்டாரத்தில் சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் வட்டாரத்தில் சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் வட்டாரத்தில் விஷக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தினமும் ஏராளமானோா் காய்ச்சல் பாதிப்பால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தாலும், இந்த வட்டாரத்துக்குள்பட்ட ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சுகாதாரமான குடிநீா் விநியோகிக்கப்படவில்லை என மக்கள் புகாா் கூறுகின்றனா்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, டெங்கு ஒழிப்புப் பணியில் மஸ்தூா் பணியாளா்கள் ஈடுபட்டு வரும் நிலையில், கிள்ளியூா், கருங்கல், உண்ணாமலக்கடை, கீழ்குளம், நல்லூா், பாலப்பள்ளம் ஆகிய பேரூராட்சிகள், பாலூா், மிடாலம், மத்திகோடு, இனயம், இனயம்புத்தன்துறை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், கொல்லஞ்சி ஆகிய ஊராட்சிகளில் மேல்நிலை நீா்த் தொட்டிகளில் குளோரினேஷன் முறையாக செய்யப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா். மேலும், குடிநீா் சுகாதாரமாக விநியோகிக்கப்படுகிா என்பதை சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com