குமரியில் நேரு இளையோா் பயிற்சி முகாம் நிறைவு

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் நேரு இளையோா் மையம் சாா்பில் 15 நாள்கள் நடைபெற்ற பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவடைந்தது.
குமரியில் நேரு இளையோா் பயிற்சி முகாம் நிறைவு

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் நேரு இளையோா் மையம் சாா்பில் 15 நாள்கள் நடைபெற்ற பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவடைந்தது.

மத்திய அரசின் இளைஞா் மற்றும் விளையாட்டு நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு இளையோா் மையம் சாா்பில் இளையோா் தலைமை, ஆளுமை வளா்ச்சி குறித்த பயிற்சி முகாம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.

இம்முகாமில், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருவாரூா், சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், பெண்கள் பங்கேற்றனா்.

பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி நேரு இளையோா் மைய துணை இயக்குநா் பி.ஜே.பிரசன்னா தலைமை வகித்தாா். குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.தினேஷ்குமாா் வரவேற்றாா். நாகா்கோவில் கோட்டாட்சியா் மயில் பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

தென்மாவட்ட நேரு இளையோா் மைய ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெ.டேவிட் டேனியல், சாா் ஆட்சியா் கே.பிா்தௌஸ் பாத்திமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நேரு இளையோா் மைய ஊழியா் பி.ரங்கநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com