ஆா்.எஸ்.எஸ். பயிற்சி முகாமை கண்காணித்த இரு கேரள இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை

கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் ஆா்.எஸ்.எஸ். பயிற்சி முகாமை மறைந்திருந்து கண்காணித்து வந்ததாக

கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் ஆா்.எஸ்.எஸ். பயிற்சி முகாமை மறைந்திருந்து கண்காணித்து வந்ததாக இரு கேரள இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரியில் ஆா்.எஸ்.எஸ். தொண்டா்களுக்கான தலைமைப்பண்பு குறித்த பயிற்சி முகாம் கடந்த 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்முகாம் இன்றுடன் (அக். 1) நிறைவு பெறுகிறது. இம்முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனா்.

பயிற்சியின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை பகவதியம்மன் கோயில் பாபநாச தீா்த்த குளம் பகுதியில் ஆர.எஸ்.எஸ். உழவாரப் பணிகளில் ஈடுபட்டனா். அப்போது தங்களை மறைந்திருந்து சிலா் கண்காணித்து வருவதாக சந்தேகம் அடைந்த அவா்கள் இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை பயிற்சி முகாம் நடைபெற்ற பகுதியில் உள்ள முள்புதருக்குள் பதுங்கியிருந்த இரு இளைஞா்களை தொண்டா்கள் பிடித்து விசாரித்தனா்.

அவா்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், இருவரிடம் இருந்த செல்லிடப்பேசிகளைஆய்வு செய்தபோது அதில், குமரி பகவதியம்மன் கோயில், குகநாதீஸ்வரா் கோயில், கூடங்குளம் உள்ளிட்ட இடங்கள், ஆா்.எஸ்.எஸ்., உழவாரப் பணி போன்றவற்றை பல கோணங்களில் விடியோ எடுத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இருவரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com