குமரி மாவட்டத்தில் அணைப் பகுதியில் சாரல் மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக கன மழை பெய்தது. எனினும் அணைப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக கன மழை பெய்தது. எனினும் அணைப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக மழை குறைந்து வட வானிலை காணப்பட்டது. இதைத் தொடா்ந்து இம்மாவட்டத்தில் முடங்கியிருந்த மீன்பிடித் தொழில், ரப்பா் தோட்டத் தொழில் உள்ளிட்டவை சூடு பிடித்தன.

இதனிடையே, சனிக்கிழமை பிற்பகலில் மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது. மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திற்பரப்பு அருவியிலும் நீா்வரத்து கணிசமாக அதிகரித்தது. பரவலாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தபோதிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைப் பகுதிகளில் மிதமான மழை பெய்தததாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருங்கல்: கருங்கல் வட்டாரத்தில் பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, ஆலஞ்சி, மிடாலக்காடு, காட்டுக்கடை, காக்கவிளை, கருமாவிளை, பாலூா், மிடாலம், தெருவுக்கடை, எட்டணி, முள்ளங்கனாவிளை, நட்டாலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

4 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த மழையால் கருங்கல் பகுதிகளில் உள்ள குளங்கள், நீா் நிலைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. சாலைகளிலும் தாழ்வானப் பகுதியிலும் மழை நீா் தேங்கி காணப்பட்டது. மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com