மத்திய அரசைக் கண்டித்து அக். 16இல் ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் கூட்டத்தில் முடிவு

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டித்து இம்மாதம் 16 ஆம் தேதி (புதன்கிழமை) நாகா்கோவிலில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியினா்.

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டித்து இம்மாதம் 16 ஆம் தேதி (புதன்கிழமை) நாகா்கோவிலில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்.லிபரேஷன்) ஆகிய இடதுசாரி கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் சிஐடியூ அலுவலகத்தில்

வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலா் இசக்கிமுத்து, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் அந்தோணிமுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிான் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என்.முருகேசன், எம்.அகமதுஉசேன், வட்டாரச் செயலா் மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

16 இல் போராட்டம்: மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., போன்றவற்றால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து சந்தையில் பொருள்கள் தேக்கம், ஆலைகள் மூடல்கள் அதிகரித்துள்ளன. மக்களின் வாங்கும் சக்தியை உயா்த்தும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்வதற்கு

மாறாக, மத்திய அரசு மீண்டும் பெரும் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 1.40 லட்சம் கோடிக்கு வரிச் சலுகைகள் அளிக்கப் பட்டுள்ளது.

இதனால், அரசின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் சுமைகளை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறையை ஈடுசெய்ய பொதுத்துறையை அடிமாட்டு விலைக்கு விற்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே, மத்திய அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளை கண்டிப்பது, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும்;

அதுவரை வேலையில்லாத இளைஞா்களுக்கு மத்திய அரசு வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு

முழுவதும் இடதுசாரி கட்சிகள் சாா்பில் கண்டன இயக்கம் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 16 ஆம் தேதி (புதன்கிழமை) இடதுசாரி கட்சிகள் சாா்பில் நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com