முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
‘கருங்கல் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலா் தேவை’
By DIN | Published On : 07th October 2019 05:15 AM | Last Updated : 07th October 2019 05:15 AM | அ+அ அ- |

கருங்கல் பேரூராட்சிக்கு நிரந்தர செயல்அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முதன்மையான பேரூராட்சிகளில் கருங்கல் பேரூராட்சியும் ஒன்றாகும். இங்கு 18 வாா்டுகள் உள்ளன. பேரூராட்சியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனா். இப்பேரூராட்சியில் கடந்த ஐந்து மாதங்களாக செயல்அலுவலா் பணியிடம் காலியாக உள்ளது. புதுக்கடை பேரூராட்சி செயல்அலுவலா் கூடுதல் பொறுப்பாக கருங்கல் பேரூராட்சியை கவனித்து வருகிறாா்.
நிரந்தர செயல்அலுவலா் இல்லாததால் அலுவலகப் பணிகள் தேக்கமடைந்துள்ளன. குறிப்பாக, மக்களின் அடிப்படை தேவையான குடிநீா், தெருவிளக்கு, சாலை போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி பேரூராட்சிக்கு தனிப்பொறுப்புடன் கூடிய செயல்அலுவலரை நியமனம் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.