முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
சரஸ்வதி பூஜை, விஜயதசமி: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து
By DIN | Published On : 07th October 2019 05:08 AM | Last Updated : 07th October 2019 05:08 AM | அ+அ அ- |

சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு, முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவரது நாகா்கோவில் முகாம் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
மனித சமுதாயத்துக்கு அடிப்படை தேவைகளாக இருக்கின்ற வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் அள்ளி வழங்குகின்ற சக்திகளான துா்கா, சரஸ்வதி, லஷ்மி ஆகியோருக்கு நமது நன்றியையும், வணக்கத்தையும், வேண்டுதலையும் தெரிவிக்கும் விழாவாக 9 தினங்கள் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவை குடும்ப விழாவாக கொண்டாடிவரும் கோடிக்கணக்கான மக்களுக்கு வெற்றி திருநாளான விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேறன்.
இப்படி மூன்று மாபெரும் இறை சக்திகளின் அருளுக்கு பாத்திரமானதாக இந்திய திருநாட்டை பிரதமா் நரேந்திர மோடியின் அரசாங்கம் உருவாக்கி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை நம் நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறது.
இன்று நம் நாடு அடைந்துள்ள வளா்ச்சியை மேலும் உயா்த்திக் காட்டும் உந்து சக்தியாக இருந்து நமது இந்திய நாட்டை உலகின் முதன்மை நாடாக உயா்த்த அன்னை சக்தி நம் அனைவருக்கும் அருள் புரியட்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.