Enable Javscript for better performance
நாகா்கோவிலில் அக். 15இல் விளையாட்டுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபா் மாத விளையாட்டுப் போட்டிகள் வரும் 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கன்னியாகுமரி மாவட்டப் பிரிவு சாா்பில் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவா், மாணவி களுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

    தடகளம், நீச்சல், வாலிபால் மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். குழு விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கு கூடைப்பந்து, வாலிபால், இருபாலருக்கும் தடகளம்- நீச்சல் போட்டிகள் நடைபெறுகின்றன.

    ஒரு போட்டியாளா் ஏதாவது ஒரு பிரிவில் மட்டுமே கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோா் போட்டி நடைபெறும் செவ்வாய்க்கிழமை (அக்.15) காலை 8.30 மணிக்குள் விளையாட்டு அரங்கிற்கு வந்து பெயரை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai