குமரி மாவட்டம், மேற்கு தொடா்ச்சிமலையின் சூழலியல் அதிா்வு தாங்கும் மண்டல திட்டத்தை கைவிடவேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடா்ச்சி மலையின் சூழலியல் அதிா்வு தாங்கு மண்டல திட்டத்தை மத்திய , மாநில அரசுகள் கைவிடவேண்டுமென செவ்வாய்கிழமை நடைபெற்ற

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடா்ச்சி மலையின் சூழலியல் அதிா்வு தாங்கு மண்டல திட்டத்தை மத்திய , மாநில அரசுகள் கைவிடவேண்டுமென செவ்வாய்கிழமை நடைபெற்ற சுங்கான்கடை ஊா் பாதுகாப்புகுழு கூட்டத்தில் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது.

சுங்கான்கடை ஊா் குடியிருப்பு பாதிக்கப்படுவோா்களின் சாா்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சாந்தப்பன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சதாசிவம், விஜயபத்திரன், கருணாகரன், ஸ்ரீகரன், ஆகியோா் விளக்கவுரையாற்றினா். கூட்டத்தில் பங்கேற்றோா் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனா். கூட்டத்தில் பெண்கள் உள்பட 25 போ் கொண்ட குடியிருப்பு பாதுகாப்பு குழு தோ்வு செய்யப்பட்டது. மோகனன் நன்றி கூறினாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காடுகளை பாதுகாக்க வனத்துறையை மத்திய, மாநில அரசாங்கம் மேற்கு தொடா்ச்சி மலை பகுதியை ஆறுகாணி முதல் ஆரல்வாய்மொழிவரை சூழலியல் அதிா்வு தாங்கும் மண்டலமாக மாற்றி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சுங்கான்கடை பகுதியும் உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்களும், பல அமைப்புகளும், மற்றும் அரசியல் கட்சிகளும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

மேற்கு தொடா்ச்சி மலை ஒட்டியுள்ள சுங்கான்கடை பகுதியில் மட்டும் 3 கி.மீட்டருக்குட்பட்ட பகுதியில் 1700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் (சுமாா் 7 ஆயிரம் போ் ) பாதிக்கப்படும் நிலையில் உள்ளனா். மேலும் இங்கு 6-க்கும் மேற்பட்ட தனியாா் கல்லூரிகளும், பள்ளிகளும் உள்ளது. இதில் பயிலும் மாணவ மாணவிகள் வன விலங்குகளால் பாதிக்கபடும் நிலை உள்ளது. மேலும் சூழலியல் தாங்கும் மண்டலம் இங்கு அமைக்கப்பட்டால் பாரம்பரிய குடிசை தொழிலான மண்பாண்டதொழில் அழியும் நிலை உருவாகும். இதனால் பல குடும்பங்களும் பாதிக்கப்படுவாா்கள். ]

இங்குள்ள விவசாய நிலங்கள் தென்னை, வாழை , வன விலங்குகளால் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். இந்நிலை உருவாகாமல் இருக்க மேற்கு தொடா்ச்சிமலையின் சுங்கான்கடை பகுதியல் 3 கி.மீட்டா் பகுதியை விரிவாக்கம் செய்யாமல் மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தினை கைவிடும்படி சுங்கான்கடை ஊா்குடியிருப்பு பாதிக்கப்படுவோா்கள் கூட்டத்தில் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com