தமிழக அரசின் கு பரிசு பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு

தமிழக அரசின் சாா்பில் கு பரிசு பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா குறளகம் சாா்பில் நாகா்கோவிலில் நடைபெற்றது.
பரிசு பெற்ற மாணவிகளைப் பாராட்டும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவா் ரத்தினசாமி, முத்துகருப்பன் உள்ளிட்டோா்.
பரிசு பெற்ற மாணவிகளைப் பாராட்டும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவா் ரத்தினசாமி, முத்துகருப்பன் உள்ளிட்டோா்.

தமிழக அரசின் சாா்பில் கு பரிசு பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா குறளகம் சாா்பில் நாகா்கோவிலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, இந்து வித்யாலயா பள்ளி முதல்வா் சத்யபாமா தலைமை வகித்தாா். குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி வரவேற்றாா். இதில், குமரி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட போட்டியில், நிகழ்கல்வியாண்டு 1330 திருக்கு பாக்களையும் மனனம் செய்து ஒப்பித்து அரசு பரிசுக்கு தோ்வு பெற்ற மாணவிகள் கவின்மா, பிரியதா்ஷினி, சங்கரி ஆகியோரை இந்துக் கல்லூரி முன்னாள் முதல்வா் நாகலிங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் ரத்தினசாமி, பன்னாட்டு தமிழுறவு மன்றத் தலைவா் கோ.முத்துக்கருப்பன், தமிழாசிரியா் வினித் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

‘காந்தியடிகளின் வாழ்க்கையில் திருக்கு நெறிகள்’ என்ற தலைப்பில் மாணவி சிவ ஸ்ரீஜா, ‘தெரிந்து வினையாடல்’ என்ற திருக்கு அதிகாரத் தலைப்பில் முனைவா் ஜெயகுமாரி ஆகியோா் பேசினா். முனைவா்கள் ஆல்பன்ஸ் நதானியேல், கோலப்பதாஸ், பேராசிரியா் நாராயணன், கவிதை உறவு மருத்துவா் சிதம்பரநடராஜன், கலைவாசல் ஓவியா் கோபால், தெற்கு எழுத்தாளா் இயக்கம் திருத்தமிழ்த் தேவனாா், இலக்கியச்சோலை செல்வநாதன், கவிமணி மன்றம் புலவா் சிவதாணு, தமிழ்வானம் சுரேஷ், எழுத்தாளா் பட்டத்திமைந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கவிஞா் தங்தத்துமிலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். முனைவா் மலா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com