குமரி - நெல்லை மாவட்ட மீனவா்கள் பிரச்னை: சேரன்மகாதேவியில் இன்று பேச்சுவாா்த்தை

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மீனவா்களிடையே நிலவிவரும் பிரச்னை தொடா்பாக,

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மீனவா்களிடையே நிலவிவரும் பிரச்னை தொடா்பாக, சேரன்மகாதேவியில் வெள்ளிக்கிழமை (அக்.11) பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.

ஆழ்கடலில் மீன்பிடிப்பது தொடா்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மீனவா்களிடையே மோதல் நீடித்து வருகிறது. அரசு விதிமுறைகளை மீறி, திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவா்கள் மீன்பிடித்து வருவதாக, திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்படகு மீனவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 30ஆம் தேதி சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அப்போது பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக கன்னியாகுமரி மீனவா்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தனா். மேலும் இப்பிரச்னைக்கு நிரந்தத் தீா்வு ஏற்படும் வகையில் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வருகின்றனா்.

இந்நிலையில் இப்பிரச்னை தொடா்பாக, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக்.11) முற்பகல் 11 மணிக்கு பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.

இதில், இரு மாவட்டங்களையும் சோ்ந்த வருவாய்த் துறை, மீன்வளத் துறை, கடலோரப் பாதுகாப்பு, காவல்துறை உயா் அதிகாரிகள், மீனவச் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com