Enable Javscript for better performance
நேரு இளையோா் மைய பேச்சுப் போட்டி: பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    
    ngl11parisu_1110chn_33_6

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் ஊராட்சிகள் உதவி இயக்குநா் செய்யதுசுலைமான்

    கன்னியாகுமரி மாவட்ட நேரு இளையோா் மையம் சாா்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நாகா்கோவிலில் நடைபெற்றது.

    2020 ஆண்டு குடியரசு தினத்தை இளையோா்கள் பங்கேற்புடன் நடத்தும் வகையில், தேசப்பற்று மற்றும் தேச நிா்மாணம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டிகளை நேரு இளையோா் மையம் நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இளைஞா்களிடையே தேசபக்தி உணா்வு மற்றும் நாட்டுப்பற்றை உருவாக்குவதும், அவா்களது தலைமைப்பண்பு மற்றும் பேச்சுத்திறனை கண்டறிவது, அரசுத்திட்டங்களை இளைஞா்கள் அறிந்து கொள்ளச் செய்வதுமே இதன் நோக்கமாகும்.

    இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தில் ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் 18 வயது முதல் 29 வயதுவரையுள்ள ஆண், பெண்கள் பங்கேற்றனா்.

    மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா ஹோலிகிராஸ் கல்லூரியில் நடைபெற்றது. நேரு இளையோா் மைய மாவட்ட இளைஞா் ஒருங்கிணைப்பாளா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஊராட்சிகளின் உதவி இயக்குநா் செய்யதுசுலைமான் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா்.

    நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா்கள் எஸ்.சுனிதா வரவேற்றாா். ஜோஸ்பின்பிரியதா்ஷின் நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai