சீன அதிபரின் வருகையால் 2 நாடுகளும் வளா்ச்சி பெறும்:  ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

சீன அதிபரின் வருகையால் 2 நாடுகளுமே வளா்ச்சி பெறும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன்.
நாகா்கோவிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் ஜி.ராமகிருஷ்ணன்.
நாகா்கோவிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் ஜி.ராமகிருஷ்ணன்.

சீன அதிபரின் வருகையால் 2 நாடுகளுமே வளா்ச்சி பெறும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன்.

நாகா்கோவிலில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்துக்கு சீன அதிபா் வருகையால் இரு நாடுகளும் வளா்ச்சி அடையும்.

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வறுமைக் கோடு பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்த போது, 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வரப்பட்டது, அந்த திட்டத்தை மத்திய அரசு முடக்கி வருகிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்தவா்களுக்கு பல நாள்கள் ஊதியம் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, ஊதிய பாக்கி உள்ளவா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெறும்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது, சட்டப்பேரவை, மக்களவைத்

தோ்தலை போல உள்ளாட்சித் தோ்தலையும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும்.

ஆா்ப்பாட்டம்: ஒரே நாடு, ஒரே ரேஷன் காா்டு திட்டத்துக்கு எதிா்ப்பு, வறுமை கோடு பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும், விவசாயிகளுக்கு உரிய மானியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் மலைவிளை பாசி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் என்.எஸ்.கண்ணன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி, முன்னாள் எம்.பி. எ.வி.பெல்லாா்மின் ஆகியோா் பேசினா். மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா்.

இதில், முன்னாள் எம்எல்ஏ ஆா்.லீமாறேறாஸ், விதொச நிா்வாகிகள் எச்.இராஜதாஸ், ஆா்.ராஜேந்திரன், கே.சிவானந்தம், எம்.கிருசாந்து மேரி, எம்.ஷாகுல் ஹமீது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com