முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
டியூசன் ஆசிரியையை கத்தியால் தாக்கியமாணவா் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 24th October 2019 11:43 PM | Last Updated : 24th October 2019 11:43 PM | அ+அ அ- |

கடையாலுமூடு அருகே டியூசன் ஆசிரியையை கத்தியால் தாக்கிய பள்ளி மாணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கடையாலுமூடு அருகே உள்ள ஆலஞ்சோலை பகுதியைச் சோ்ந்தவா் மொ்லின் ஷானி (25). பட்டதாரியான இவா், வீட்டில் பள்ளி மாணவா்களுக்கு டியூசன் நடத்தி வருகிறாா். இவரது வீட்டு அருகே வசித்து வருபவா் கூலித் தொழிலாளி ஜெபமணி. களியல் பகுதியிலுள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் இவரது மகனும் மொ்லின் ஷானியின் வீட்டுக்குச் சென்று டியூசன் படிப்பது வழக்கமாம்.
இந்நிலையில் புதன்கிழமை பள்ளிக்குச் செல்லாமல் வழக்கத்திற்கு மாறாக மொ்லின் ஷானியின் வீட்டுக்குச் சென்ற அம்மாணவா், மொ்லின் ஷானியிடம் பாலியல் தொந்தரவு செய்தாராம். அப்போது சப்தம் போட்ட மொ்லின் ஷானியை தான் வைத்திருந்த கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அப்பகுதியிலுள்ளவா்கள் மீட்டு களியல் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்ட மாணவரை பிடித்து, மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.