முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
தேரூரில் கவிமணி மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 24th October 2019 11:44 PM | Last Updated : 24th October 2019 11:44 PM | அ+அ அ- |

குமரி மாவட்டம் தேரூரில் கவிமணி மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தென்குமரி எழுத்தாளா்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, இயக்கத் தலைவா் சி.முத்துகுமாா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை முற்போக்கு சிந்தனையாளா், சிறந்த படைப்பாளி. அவரது நினைவாக தேரூரில் மணிமண்டபம் கட்ட தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் அந்த மண்டபம் தற்போது தோவாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. கவிமணி பிறந்த ஊா் தேரூா். அவா் படித்த பள்ளி, இருப்பிடம் எல்லாமே தேரூரில் உள்ளது. இந்நிலையில் அவரது மணிமண்டபத்தை தோவாளையில் கட்டுவது ஏற்புடையதல்ல.
எனவே, கவிமணியின் மணிமண்டபத்தையும், சுசீந்திரத்தில் இருந்து அகற்றப்பட்ட அவரது சிலையையும் தேரூரில் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.